தாயைப் பார்க்க உதயாவை அனுமதிக்க வேண்டும்.

November 20, 2008, 9:01 pm மலேசியாஇன்று பிரிவு: செய்தி

இசா கைதியும் இண்ட்ராபின் சட்ட ஆலோசகருமான பி.உதயகுமார், நோயுற்றிருக்கும் அவரின் தாயாரைச் சென்று பார்க்க உள்துறை அமைச்சும் சிறை அதிகாரிகளும் அனுமதிக்க வேண்டும். விரிவாக

ஷாருக்கின் விருதளிப்பு ஒத்திவைப்பு

November 20, 2008, 8:57 pm மலேசியாஇன்று பிரிவு: செய்தி

போலிவுட் நட்சத்திரமான ஷாருக் கான், வேலைமிகுதியின் காரணமாக  டத்தோ பட்டமளிக்கும் சடங்கில் கலந்துகொள்ள இயலாது. இதனால் அச்சடங்கு ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் இன்று தெரிவித்தனர். விரிவாக

தலைப்புச் செய்திகள் நவம்பர் 20

November 20, 2008, 4:36 pm மலேசியாஇன்று பிரிவு: செய்தி

மலேசியாவில் இன்று வெளியான ஆங்கில, மலாய், தமிழ்  நாளிதழ்களின் முக்கிய செய்திகளும் தலையங்கமும்.

முகப்புச் செய்திகள்

ஆங்கில நாளிதழ்கள்

நியு ஸ்ட்ரேய்ட்ஸ் டைம்சில், குழுவாரியான சிந்தனைகளுக்கு இடம்தர வேண்டாம் என்ற பேராக் அரசப் பேராளர் ராஜா நஸ்ரின் ஷாவின் எச்சரிக்கை முதல்பக்கத்தில் இடம்பெற்றுள்ளது. அடிப்படைகளை மாற்ற வேண்டும் என்ற வாதத்தையும் தீவிரவாதத்தையும் நிராகரித்து மலேசியாவின் பல்வேறு சமூகத்தவரின் பங்களிப்பு மதிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். விரிவாக

அன்வார் வழக்கை பிப். 5, 6-இல் உயர்நீதிமன்றம் ஆராயும்

November 20, 2008, 12:16 pm மலேசியாஇன்று பிரிவு: செய்தி

செசன்ஸ் நீதிமன்றம், எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிமின் குதப்புணர்ச்சி வழக்கை அங்கேயே விசாரிப்பதென்று செய்துள்ள முடிவை,  கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் பிப்ரவரி 5 ஆம் 6 ஆம் தேதிகளில் பரிசீலனை செய்யும். விரிவாக

அல்தான்துயா வழக்கில் நஜிப்புக்குத் தொடர்பில்லை-ரசாக்

November 20, 2008, 12:12 pm மலேசியாஇன்று பிரிவு: செய்தி

துணைப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கு, அல்தான்துயா கொலை வழக்கில் கொஞ்சம்கூட தொடர்பில்லை என்கிறார் அரசியல் விமர்சகர் அப்துல் ரசாக் பாகிண்டா. விரிவாக

பெம்பெனாவுக்கு எதிராக போலீஸ் புகார்

November 19, 2008, 10:06 pm மலேசியாஇன்று பிரிவு: செய்தி

  • புதிய குற்றச்சாட்டுகள்
  • ஊழல், நம்பிக்கை மோசடி, அதிகார துஷ்பிரயோகம்

சுற்றுலா அமைச்சு மற்றும் அதன் கிளை நிறுவனமான பெம்பெனா செண்டிரியான் பெர்ஹாட்டுக்கு எதிராக  ஊழல், நம்பிக்கை மோசடி, அதிகார துஷ்பிரயோகம் போன்ற பல தரப்பட்ட குற்றச்சாட்டுகளை சுமத்தும் போலீஸ் புகாரை ஜனநாயக செயல் கட்சியின் மூத்த அரசியல்வாதி லிம் கிட் சியாங் இன்று  செய்துள்ளார். விரிவாக

எண்ணெய் விலை நிர்ணய முறை பகிரங்கமாக அறிவிக்கப்பட வேண்டும்

November 19, 2008, 10:04 pm மலேசியாஇன்று பிரிவு: செய்தி

  • பயனீட்டாளர்கள்தான் அரசாங்கத்துக்கு உதவித் தொகை வழங்குகின்றனர்
  • கொள்கை மாற்றத்துக்கு முன்னர் பேச்சுக்கள் நடத்தப்பட வேண்டும்

இம்மாத தொடக்கத்திலிருந்தே எண்ணெய் உதவித் தொகை வழங்குவதை அரசாங்கம் நிறுத்திக் கொண்டுள்ளதாக உள்நாட்டு வாணிக பயனீட்டாளர் விவகார அமைச்சர் ஷாரிர் அப்துல் சமாட் நேற்று அறிவித்ததை தொடர்ந்து பதில்களைக் காட்டிலும் அதிக கேள்விகள்தான் இப்போது எழுந்துள்ளன. விரிவாக

ரபிடாவை எதிர்க்க ஷாரிசாட் தயாராகிறார்

November 19, 2008, 7:05 pm மலேசியாஇன்று பிரிவு: செய்தி

அம்னோ மகளிர் துணைத் தலைவி ஷாரிசாட் அப்துல் ஜலில், அப்பிரிவின் தலைமைப் பதவிக்குப் போட்டிடும் முடிவை நாளை அறிவிப்பார் என்று சில வட்டாரங்கள் கூறுகின்றன. விரிவாக

கா சுவான் பதவி விலகல்?, தி கியாட் மவுனம்

November 19, 2008, 6:40 pm மலேசியாஇன்று பிரிவு: செய்தி

மசீச தலைமைச் செயலாளர் ஒங் கா சுவான் அமைச்சர் பதவி விலகியதாகக் கூறப்படுவதன் தொடர்பில் கட்சித் தலைவர் ஒங் தி கியாட் மவுனம் காத்து வருகிறார். விரிவாக

சைட் அமிட்டுக்கு கிட் சியாங் சவால்

November 19, 2008, 6:35 pm மலேசியாஇன்று பிரிவு: செய்தி

தம்மைப் போலீசுக்கு எதிரியாகச் சித்தரித்துக்காட்டும் உள்துறை அமைச்சர் சைட் அமிட் அல்பாரை ஜசெக தலைவர் லிம் கிட் சியாங் சாடியுள்ளார்.

தம்முடன்  தொலைக்காட்சியில் விவாதமிடுவதற்குத் தயாரா என்றும் அந்த மூத்த அரசியல்வாதி அமைச்சருக்கு சவால் விடுத்தார். விரிவாக



  • தமிழ் அறவாரியம்


    தமிழ்ப்பள்ளி வளர்ச்சி
    தமிழ் மாணவர் முழுமைப் பெற்ற வளர்ச்சி
    எங்களுக்கு தொண்டூழியர்கள் தேவைப்படுகிறார்கள்
    03-26926533

    செம்பருத்தி

    11-ம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது
    முன்னேற துடிக்கும் சமூகத்தின் எழுச்சி குரல்




    We Need volunteers to help us carry out our programs throughout Malaysia
    Contact : Toll free number: 1-800-88-3973
    E-mail: admin@ewrf.org.my

  • Banners



© 2008 MalaysiaIndru. All rights reserved. Please read our Terms of Use RSS Subscribe
No. 48, Jalan Kemuja, Bangsar Utama 59000 Kuala Lumpur, Malaysia.
Tel: 03-2284 3367 (Advertising/Tech/Subscription) | 03-2283 5567 (Editorial)
Malaysiakini.com is not responsible for the content of external internet sites